22-10-2020 நேரம் காலை 9:40 மணி நாம் எதிர்பார்த்து இருந்தது போல தற்சமயம் மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டு இருக்கும் அந்த #தீவிர_காற்றழுத்த_தாழ்வு_பகுதியானது ( #Well_marked_low_pressure_area ) மேலும் தீவிரம் பெற்று வருகிறது அடுத்து வரக்கூடிய சில மணி நேரங்களில் அது வட-வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் அல்லது அதனை ஒட்டிய மேற்குவங்க மாநில கடலோர பகுதிகளில் நாளை கரையை கடக்க உள்ளது.
அது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் கரையை கடக்காமல் போவதால் தென்மேற்கு பருவமழை நாட்டின் மத்திய பகுதிகளில் குறிப்பாக மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் விலகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கையும் நேற்று வெளியாகி விட்டது.இது தொடர்பான விபரங்களுக்கு நான் இந்த பதிவுடன் இணைந்திருக்கும் 3 வது படத்தை காணுங்கள்.
அந்த #தீவிர_காற்றழுத்த_தாழ்வு_பகுதியானது ( #Well_marked_low_pressure_area ) ஒரு #குறைந்த_காற்றழுத்த_தாழ்வு_மண்டலமாக உருவெடுத்து நாளை கரையை கடந்து அதனுடைய தாக்கம் குறைய தொடங்கிய பிறகு நாட்டின் தென் இந்திய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை விலகி விட்டதாக அடுத்த 3 அல்லது 4 நாட்களில் அதிகாரபூர்வ அறிக்கைகள் வெளியாகும் தற்சமயமே நாட்டின் பல்வேறு இடங்களிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் மிகவும் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகிறது.
அடுத்து வரக்கூடிய நாட்களில் மேற்கு திசை காற்றின் வீரியம் குறைய உள்ளது அதேசமயம் கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்க உள்ளது பொதுவாக இந்த காலகட்டத்தில் பதிவாகும் வெப்பசலன மழை பலத்த இடியுடன் கூடியவையாக இருக்கும்.
இன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக வட மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாகும் எந்தெந்த பகுதிகளில் அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக பிற்பகலில் நமது Youtube பக்கத்தில் குரல் பதிவு செய்கிறேன்.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
=====================
வானமாதேவி (கடலூர் மாவட்டம்) - 67 மி.மீ
சூலகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 64 மி.மீ
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 53 மி.மீ
கலசப்பாக்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 52 மி.மீ
கடலூர் (கடலூர் மாவட்டம்) - 47 மி.மீ
மரக்காணம் (விழுப்புரம் மாவட்டம்) - 45 மி.மீ
போளூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 44 மி.மீ
குடிதாங்கி (கடலூர் மாவட்டம்) - 42 மி.மீ
அனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம்) - 38 மி.மீ
செய்யூர் (செங்கல்பட்டு மாவட்டம்) - 37 மி.மீ
ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 34 மி.மீ
கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 33 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 33 மி.மீ
வேங்கூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 33 மி.மீ
தண்டராம்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 31 மி.மீ
பண்ருட்டி (கடலூர் மாவட்டம்) - 30 மி.மீ
கடவனூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 30 மி.மீ
கேதாண்டப்பட்டி (திருப்பத்தூர் மாவட்டம்) - 29 மி.மீ
அரூர் (தர்மபுரி மாவட்டம்) - 29 மி.மீ
புதுச்சத்திரம் (நாமக்கல் மாவட்டம்) - 29 மி.மீ
தர்மபுரி PTO (தர்மபுரி மாவட்டம்) - 28 மி.மீ
கோளியனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 28 மி.மீ
ஏறையூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 28 மி.மீ
செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்) - 26 மி.மீ
வளவனூர் (விழுப்புரம் மாவட்டம்) - 26 மி.மீ
சேத்துப்பட்டு (திருவண்ணாமலை மாவட்டம்) - 25 மி.மீ
திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 24 மி.மீ
ஏற்காடு (சேலம் மாவட்டம்) - 23 மி.மீ
சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம்) - 23 மி.மீ
கேதர் (விழுப்புரம் மாவட்டம்) - 22 மி.மீ
திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 22 மி.மீ
வடக்குத்து (கடலூர் மாவட்டம்) - 21 மி.மீ
வடபத்துப்பட்டு (திருப்பத்தூர் மாவட்டம்) - 20 மி.மீ
குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) - 20 மி.மீ
விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) - 19 மி.மீ
திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்) - 19 மி.மீ
வலத்தி (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
முகையூர் (விழுப்புரம் மாவட்டம்) - 18 மி.மீ
மேமாத்தூர் (கடலூர் மாவட்டம்) - 18 மி.மீ
வல்லம் (விழுப்புரம் மாவட்டம்) - 17 மி.மீ
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 16 மி.மீ
பொல்லாந்துரை (கடலூர் மாவட்டம்) - 16 மி.மீ
பரூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 15 மி.மீ
விரிகாவூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 15 மி.மீ
செம்மேடு (திருவண்ணாமலை மாவட்டம்) - 15 மி.மீ
கரியாக்கோயில் அணை (சேலம் மாவட்டம்) - 15 மி.மீ
விரகனூர் (மதுரை மாவட்டம்) - 14 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம்) - 13 மி.மீ
கொள்ளிடம் - ஆணைக்காரசத்திரம் (மயிலாடுதுறை மாவட்டம்) - 13 மி.மீ
மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 13 மி.மீ
மதுரை வடக்கு (மதுரை மாவட்டம்) - 13 மி.மீ
ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம்) - 13 மி.மீ
கீழசெருவை (கடலூர் மாவட்டம்) - 12 மி.மீ
சின்னக்கல்லாறு (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
சோலையாறு அணை (கோவை மாவட்டம்) - 12 மி.மீ
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்) - 11 மி.மீ
வானூர் (விழுப்புரம் மாவட்டம்) - 11 மி.மீ
ஆலங்காயம் (திருப்பத்தூர் மாவட்டம்) - 11 மி.மீ
சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 11 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்ணகிரி மாவட்டம்) - 11 மி.மீ
கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 11 மி.மீ
அம்முடி (வேலூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஸ்ரீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்) - 10 மி.மீ
ஜமுனமரத்தூர் (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
குடியாத்தம் (வேலூர் மாவட்டம்) - 10 மி.மீ
அவலூர்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்) - 10 மி.மீ
காளையநல்லூர் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மாவட்டம்) - 10 மி.மீ
#Emmanuel_Paul_Antony
#Puducherry_Weather
#tamilanduweather.com
10 மி.மீ மற்றும் அதற்கும் அதிகமான அளவு மழை பதிவாகியிருக்கும் பகுதிகளின் நிலவரத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.